ஆசிய நாடுகளை உலுக்கும் வெப்பம் – இந்தியாவில் 9 பேர் உயிரிழப்பு
பல ஆசிய நாடுகளில் இந்த நாட்களில் வெப்பமான வானிலை பதிவாகியுள்ளது.
இந்தியாவில் பல மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் அதிக வெப்பம் காரணமாக இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிழக்கிந்திய மாநிலமான மேற்கு வங்கம் வெப்பமான காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மாநில மக்கள் கடும் குடிநீர் தட்டுப்பாட்டைச் சந்திக்க வேண்டியுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பெரும்பான்மையான மக்கள் கிணற்று நீரையே பயன்படுத்துவதாகவும், கிணறுகள் வற்றிவிட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கிழக்கிந்தியாவில் ஏப்ரல் மாதத்தில் சராசரியாக 28.12 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், அந்தப் பகுதிகளில் மற்ற பருவங்களில் பதிவான வெப்பநிலையின் சராசரி மதிப்பு 22.1 டிகிரி செல்சியஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, கிழக்கிந்தியாவில் 1973 முதல் ஏப்ரல் மாதம் அதிக வெப்பமான ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. இந்த வகை வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.