பிலிப்பைன்ஸில் கடும் வறட்சி – திடீரென தோன்றிய பல நூற்றாண்டுப் பழமையான ஊர்
பிலிப்பைன்ஸில் மழை இல்லாமல் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியால் பல நூற்றாண்டுப் பழமையான ஊர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நியூவா எசிஜா வட்டாரத்தில் உள்ள அணைக்கட்டில் தண்ணீர் வற்றியுள்ளது. பல்லாண்டு காலம் அங்கு மூழ்கியிருந்த தேவாலயமும் பழைய ஊரின் சில அமைப்புகளும் மக்கள் பார்வைக்கு வந்துள்ளன.
அவற்றைக் காணக் கூட்டம் அலைமோதுகிறது. சுற்றுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும் மேம்பட்டுள்ளது.
அந்தப் பழமைவாய்ந்த ஊர் 1970களில் அணைக்கட்டின் கட்டுமானத்திற்காக இடம்மாற்றப்பட்டது.
பிலிப்பீன்ஸும் மற்ற தென்கிழக்காசிய நாடுகளும் கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
(Visited 13 times, 1 visits today)