இலங்கை ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்களின் விசேட அறிவிப்பு
இலங்கையில் ஆட்பதிவு திணைக்கள அலுவலகங்கள் இன்றைய தினம் திறக்கப்படும் என ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி இதனை தெரிவித்தார்.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள விண்ணப்பதாரர்களில் சிலர் இதுவரை தமது தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டார்.
சில பரீட்சார்த்திகள் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை எனவும் ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதற்கிணங்க, கொழும்பு, காலி, குருநாகல், நுவரெலியா, வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட அலுவலகங்களை நாளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்தி குறிப்பிட்டார்.
இதனிடையே, பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களுக்கான பரீட்சை அனுமதிப்பத்திரம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்தது.
கல்வி பொது தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 06 ஆம் திகதி ஆரம்பமாகி 15 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.