சூடுபிடித்த மே தின பேரணி – யாருடைய பேரணியில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டனர்?
இன்று சில மாதங்களில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகளின் இன்றைய மே தின கொண்டாட்டங்கள் கவனிப்பை பெற்றிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன ஐக்கிய பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகியன தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் மே தின பேரணியை நடத்தியிருந்தது.
இதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன ஐக்கிய பெரமுன மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன ஆகிய கட்சிகளின் தினக் பேரணிகளில் கலந்து கொண்டவர்களை விட ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் ஜனதா விமுக்தி பெரமுன நடத்திய மே தினக் கூட்டத்தில் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட போதிலும், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரத்தில் நடைபெற்ற மே தினக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் மாத்தறை பேரணியில் கணிசமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
பெருந்தோட்டப் பகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின பேரணியில் அதிகளவான பங்கேற்பாளர்களைக் கொண்டிருந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் மே பேரணிக்காக மக்கள் ரயில்களில் முன்பதிவு செய்து கொழும்பு வந்ததையும் காணமுடிந்தது.