செய்தி விளையாட்டு

2024 T20 உலகக்கோப்பை தொடருக்கான நியூசிலாந்து அணி அறிவிப்பு

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது.

லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.

இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,

டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார்.

சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.

மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.

(Visited 17 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி