மெக்சிகோவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சொகுசு பேரூந்து – 14 பேர் உடல்நசுங்கி பலி!

மெக்சிகோ நாட்டின் குவானஜுடோ மாகாணம் சன் லூயிஸ் டி லா பெஸ் நகரில் இருந்து மத்திய மெக்சிகோ மாகாணத்தில் உள்ள மனிநல்கோ நகருக்கு நேற்று சொகுசு பஸ் சென்றுகொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45க்கும் மேற்பட்டோர் பயணித்தனர்.
கெப்லுன் – ஷல்பா நகர் இடையேயான நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணித்த பயணிகள் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 31 பேர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், இந்த விபத்துக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 19 times, 1 visits today)