ஆஸ்திரேலியாவை அதிர வைத்த சிறார் கும்பல் – சுற்றிவளைத்த பொலிஸார்
சிட்னி தேவாலயத்தில் பிஷப் ஒருவரை கத்தியால் குத்தியதையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 7 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நியூ சவுத் வேல்ஸ் மாநில பொலிஸ் மற்றும் பெடரல் பொலிஸார் கடந்த வாரம் 14 முதல் 17 வயதுக்குட்பட்ட ஏழு சிறார்களை தேவாலயத்தில் கத்தியால் குத்திய முக்கிய சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் என்று கைது செய்தனர்.
இந்த சந்தேக நபர்கள் அனைவரும் மத தீவிரவாத சித்தாந்தத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த கைதுகளின் போது கணிசமான அளவு தடை செய்யப்பட்ட பொருட்கள் உட்பட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநில காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
நேற்று கைது செய்யப்பட்ட 15 வயதுடைய சந்தேகநபர் நாளை சிறுவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு சிறுவர்கள் 6 பேர் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர்.