தியத்தலாவை விபத்தில் குழந்தை உட்பட 7 பேர் பலி : இலங்கை ராணுவத்தின் அதிரடி முடிவு
தியத்தலாவ Fox Hill Super Cross நிகழ்வில் இடம்பெற்ற கோர விபத்து குறித்து விசாரணை நடத்த மேஜர் ஜெனரல் தலைமையில் ஏழு பேர் கொண்ட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஒரு குழந்தை உட்பட 7 பேர் எந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
மற்றும் 23 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இலங்கை இராணுவப் பேச்சாளர் குழு நிறுவப்பட்டதை உறுதிப்படுத்தினார்.
ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்ற பந்தய நிகழ்வின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பான சூழ்நிலைகளை வெளிக்கொணரவே இந்த விசாரணையின் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .
விபத்து தொடர்பாக தற்போதுள்ள காணொளிகள் மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
இதேவேளை, தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு வாகன சாரதிகளும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.