இலங்கையில் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் பலி

மொரகஹஹேன பிரதேசத்தில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டிக்குள் இருந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, முச்சக்கரவண்டிக்குள் இருந்த மற்றுமொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை இரவு மொரகஹஹேன, மிரிஸ்வத்த பகுதியில் உள்ள டயர் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
(Visited 20 times, 1 visits today)