இலங்கை வரும் ஈரான் ஜனாதிபதி – சர்வதேச புலனாய்வு பிரிவினரின் கண்காணிப்பில் இலங்கை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது.
(Visited 30 times, 1 visits today)