மனிதர்களிடையேயும் பறவைக் காய்ச்சல் பரவும் என அச்சம் – WHO எச்சரிக்கை
H5N1 பறவைக் காய்ச்சல் வைரஸ் பறவைகளுக்கு இடையே மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பரவுவதாக தெரியவந்துள்ளது.
குறித்து உலகச் சுகாதார நிறுவனம் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பறவைக் காய்ச்சல் வைரஸால் அதிகமானோர் மரணமடையக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது பரவும் பறவைக் காய்ச்சல் கிருமி 2020ஆம் ஆண்டில் தொடங்கியது.
அதன் காரணமாக மில்லியன் கணக்கான கோழிகளும் வாத்துகளும் உயிரிழந்துள்ளன. கடந்த மாதம் மாடுகளும் ஆடுகளும் வைரஸால் பாதிக்கப்பட்டன.
கோழிகளுக்கும் ஆடுகளுக்கும் பறவைக் காய்ச்சல் கிருமியால் பாதிப்பு ஏற்படாது என்று நினைத்த நிபுணர்களை அது அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பறவைக் காய்ச்சல் கிருமி மனிதர்களைப் பாதிக்கும் நிலைமை ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இப்போதைக்கு அந்தக் கிருமி மனிதர்களிடையே பரவுகிறது என்பதற்கான ஆதாரம் இல்லை.
ஆனால் விலங்குகளிலிருந்து மனிதர்களிடம் வைரஸ் பரவிய சம்பவங்களில் அதிக மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.