உக்ரைனின் தாக்குதலில் ரஷ்யாவுக்கு ஆதரவாக போரிட்ட இரு இலங்கையர்கள் பலி
ரஷ்ய இராணுவத்தின் துணை சேவைகளில் வேலை வழங்கும் போர்வையில் சுற்றுலா விசாவில் அழைத்துச் செல்லப்பட்டு கூலிப்படையினராக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட இரண்டு (10) இலங்கையர்கள் ரஷ்ய பகுதியில் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் எல்லையில் உக்ரைன் இராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் இந்த இரு இராணுவ வீரர்கள் உட்பட பல ரஷ்ய இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இராணுவ வாகனங்கள் வரிசையின் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தாக்குதல் இடம்பெற்ற போது அருகில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கையர் ஒருவர் தனது வீட்டில் (11) தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர்கள் மற்றும் இந்த தகவலை இலங்கைக்கு வழங்கியவர் இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற கணிசமானோர் ரஷ்யாவிற்கு ஆதரவு சேவைக்காக அழைத்துச் செல்லப்பட்டு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு இராணுவத்தில் ஈடுபடுத்தப்பட்டதாக இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடத்தலை மேற்கொள்ளும் நபர்கள் மற்றும் ஏஜென்சிகள் குறித்த பல தகவல்களை ரஷ்ய இராணுவம் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அளித்துள்ளது. கூலிப்படையினராக பணிபுரியும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் பாரிய துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
கூலிப்படையினராக பயன்படுத்தப்படும் இவர்கள் தப்பிச் செல்ல முடியாமல் திரும்பி வந்தால் சுட்டுக்கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தப்பிச் செல்லத் தயாரானால் சுட்டுக் கொன்று விடுவார்கள் என சிப்பாய் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் உள்ள இலங்கை தூதரகத்தின் உதவியுடன் பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து காட்டுப்பாதையில் பயணித்து இந்த நாட்டுக்கு வந்ததாக ரஷ்ய சந்திப்புகளில் இருந்து தப்பிய இலங்கையர் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய மொழியில் ஆவணங்களைக் காட்டி இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.