துருக்கியில் மிகப் பெரிய அளவில் கொகோயின் போதைப் பொருள் கண்டுப்பிடிப்பு!
துருக்கியில் வரலாற்றில் மூன்றாவது முறையாக மிகப் பெரிய அளவில் கொகோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா இது தொடர்பான தகவல்களை இன்று (11.04) அறிவித்துள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கண்காணிக்கும் குழுக்கள் ஐரோப்பாவை போதைப்பொருள் நுழைவாயிலாக மாறி வருவதாக எச்சரித்தது.
சுமார் 608 கிலோகிராம் (1,340 பவுண்டுகள்) கோகோயின் கைப்பற்றப்பட்டதாகவும், அவற்றில் பெரும்பாலானவை திரவ வடிவில் பொதி செய்யப்பட்டிருந்தாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் போன்ற துறைமுகங்களில் பாதுகாப்பு கடுமையாக இருப்பதால், தென் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு வரும் கோகோயின் போக்குவரத்து மையமாக துருக்கி இருப்பதாக குற்றங்களை கண்காணிக்கும் குழு அறிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)