ஜெர்மன் மக்கள் ஏற்பட்டுள்ள நெருக்கடி – அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
ஜெர்மனியில் மக்கள் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் 14 மில்லியன் மக்கள் வறுமையில் வாழ்வதாக புதிய புள்ளிவிபரம் வெளியான நிலையில் மக்கள் மத்தியில் அதிர்சி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார ரீதியாக முன்னிலை வகிக்கும் ஜெர்மனியில் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமையில் வாழும் மக்களில் 25 வீதமானவர்கள் சிறுவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள சிறுவர்களுக்கு கைகொடுக்கும் வகையில் நிதியம் ஒன்று விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சர் லீசா பவுஸ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சிறுவர்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்த நிதியத்தின் செயற்பாடுகள் அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய கட்டமைப்பை நடைமுறைப்படுத்த போதுமான அளவு பணியாளர்கள் தேவை. அதற்காக 5000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த பல்லாயிரக்கணக்கானவர்கள் தேவைப்படும் நிலையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனினும் புதிய நிதியத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு தாம் இதுவரை அனுமதி வழங்கவில்லை என, ஜெர்மன் நிதியமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.