இந்தியா

இந்தியாவில் 120 அடி தேர் சரிந்து விழுந்தது விபத்து!

பெங்களூரு ஆனைக்கல் அருகே புகழ் பெற்ற மதுராம்மா கோயிலின் 120 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட தேரானது சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவினைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ தினத்தன்று 120 அடி உயரம் கொண்ட தேரை பொதுமக்கள் நகர் பகுதிகளில் இழுத்துச் சென்றுள்ள நிலையில் தேர் எதிர்பாராத விதமாக சரிந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது தேர் சரியப்போவதை உணர்ந்த அனைவரும் தப்பி ஓடியதால் எந்தவித உயிர் சேதமோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 18 times, 1 visits today)

VD

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே