இந்தியா

இந்தியாவின் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றி!

ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து, அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி பிரைமை இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.

நாட்டின் பாதுகாப்புக்கு அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு, ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை பல்வேறு நிலைகளில் திறன் மேம்படுத்தப்பட்ட அக்னி ஏவுகணைகள் இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஒடிசா கடற்கரையில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் தீவில் இருந்து அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணையான அக்னி-பிரைமை இந்தியா வெற்றிகரமாக நேற்றிரவு 7 மணிக்கு சோதனை செய்ததாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் புதிய தலைமுறை ஏவுகணை அக்னி பிரைம் சோதனை

இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல்வேறு இடங்களில் நிறுவப்பட்டுள்ள பல சென்சார்களால் பெறப்பட்ட தரவுகளிலிருந்து உறுதிப்படுத்தப்பட்டபடி, சோதனை அதன் நம்பகமான செயல்திறனை சரிபார்க்கும் அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்துள்ளது.ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி கழகம் (டிஆர்டிஓ) இணைந்து வியூக படை கட்டளை (எஸ்எப்சி) இணைந்து இந்த சோதனையை மேற்கொண்டன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சோதனையை, பாதுகாப்புத் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான், எஸ்எப்சி தலைவர், டிஆர்டிஓ, இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பார்வையிட்டனர். புதிய தலைமுறை பாலிஸ்டிக் ஏவுகணை அக்னி பிரைம் சோதனை வெற்றிக்கு பாராட்டு தெரிவித்துள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இது பாதுகாப்பு துறையின் ஆயுதப் படை திறமைக்கு வலிமை சேர்க்கும் என கூறியுள்ளார்.

இதேபோல், எஸ்எப்சி, டிஆர்டிஓ-வின் முயற்சிக்கு பாதுகாப்புத் தளபதி ஜெனரல் சவுகான், டிஆர்டிஓ தலைவர் சமீர் வி காமத் ஆகியோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!