ஆசியா

ஜப்பானில் அடுத்தடுத்து 6.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்…

ஜப்பானின் வடக்குப் பகுதியில் அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், மக்கள் வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் அவ்வப்போது ஏற்படும் நிலநடுக்கங்களால் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி ஏற்படும் இதுபோன்ற நிலநடுக்க இயற்கை பேரிடர்களால் ஏராளமான பொதுமக்களின் உயிர்கள் மட்டுமின்றி உடமைகளும் சேதமாகி வருகிறது. அந்த வகையில் ஆப்கானிஸ்தானில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இந்த நிலையில் ஜப்பானில் 2 இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு 12.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கங்களால் வீடுகள்லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் அந்த மாகாணங்களின் வடகடலோரப் பகுதிகளில் மையம் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.

மேலும் இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!