வித்தியா கொலை குற்றவாளி சிறையில் மரணம்

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணம் புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் சிறைச்சாலையில் மரணமடைந்துள்ளார்.
அவசர சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று (31) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
உயிரிழந்தவர் 41 வயதுடையவர் எனவும் அவர் மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த நபர் பக்கவாதம் காரணமாக அவ்வப்போது நோய்வாய்ப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வித்தியா படுகொலை செய்யப்பட்டதோடு, அது தொடர்பில் கைது செய்யப்பட்ட ஏழு பேருக்கு 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
(Visited 15 times, 1 visits today)