இந்தியா

அருணாச்சல் விவகாரத்தில் சீனாவுக்கு பதிலடி கொடுத்த இந்தியா !

இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் மீது சீனா தொடர்ந்து உரிமை கொண்டாடி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே அம்மாநிலத்தில் எல்லைகளில் உள்ள பல பகுதிகளின் பெயர்களை சீன மொழியில் மாற்றி அறிவித்து வருகிறது.

ஏற்கெனவே 2017ல் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஆறு இடங்களின் பெயர்களை மாற்றி முதல் பட்டியலையும், 2021ல் 15 இடங்களின் பெயர்களை மாற்றி இரண்டாவது பட்டியலையும், 2023ல் 11 இடங்களுக்கான பெயர்களை மாற்றி மூன்றாவது பட்டியலையும் வெளியிட்டது. தற்போது நான்காவதாக இந்தியா – சீனா எல்லையில் உள்ள 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளது.

இந்திய பகுதியை உரிமை கோரி வரும் சீனா

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியாவின் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு சீனா தனது மொழியில் புதிய பெயர்களை வைத்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இடத்தின் பெயரை மாற்றுவதால் அதன் உரிமை மாறிவிடாது. அருணாச்சலப் பிரதேசம் நேற்றும், இன்றும், நாளையும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே தொடரும். நான் உங்கள் வீட்டின் பெயரை மாற்றினால், அது என்னுடையதாகிவிடுமா?. பெயர்களை மாற்றும் சீனாவின் செயல், எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. நாம் எல்லையில் நமது ராணுவத்தை குவித்திருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சீனாவால் மறுபெயரிடப்பட்ட அருணாச்சலப் பிரதேசத்துக்கு சொந்தமான இடங்களின் பட்டியலில் 11 குடியிருப்பு பகுதிகள், 12 மலைகள், நான்கு ஆறுகள், ஒரு ஏரி, ஒரு மலைப்பாதை உள்ளன. இவற்றின் பெயர்களை சீன மொழியான மாண்டரின் மொழியிலும், அதேபோல் திபெத்திய மொழியிலும் மாற்றியுள்ளது சீன அரசு.

 

(Visited 20 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!