போரினால் பாதிக்கப்பட்டுள்ள காசா பகுதியில் வாழும் சிறுவர்களுக்கு இலங்கை நிதியுதவி!
காஸா பகுதியில் இடம்பெற்ற மோதல்களினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக இலங்கை அரசாங்கம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உத்தியோகபூர்வ முகவரகத்தின் ஊடாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (01.04) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து பலஸ்தீன அரசாங்கத்திடம் இந்த நன்கொடை கையளிக்கப்பட்டது.
இவ்வருடம் இப்தார் கொண்டாட்டத்தை நடாத்துவதற்காக அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களால் ஒதுக்கப்பட்ட நிதியை இந்த நிதிக்கு வழங்குமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த நிதி சேகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





