ஐரோப்பா

ரஷ்யாவின் தங்கச் சுரங்க விபத்தில் சிக்கியிருந்த அனைவரும் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!

ரஷ்யாவின் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சிக்கிக் கொண்ட 13 பணியாளர்களும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 18 அன்று மாஸ்கோவிற்கு கிழக்கே சுமார் 5,000 கிலோமீட்டர் (3,000 மைல்) தொலைவில் உள்ள அமுர் பிராந்தியத்தின் Zeysk மாவட்டத்தில் சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

இதில் 13 பணியாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது மீட்பு பணிகள் இடைநிறுத்தப்பட்டு, இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கம் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும், அதன் பல பகுதிகள் இடிந்து விழும் அபாயத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் இன்று (01.04) அறிவித்துள்ளனர்.

ரஷ்யாவின் மிகப்பெரிய சுரங்கங்களில் ஒன்றான சுரங்கத்தை இயக்கும் நிறுவனம், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதாக கூறியது.

விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் உடனடியாக தெரிவிக்கவில்லை. கடந்த காலங்களில் நடந்த பெரும்பாலான சுரங்க விபத்துகள் பாதுகாப்பு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!