இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது கட்சி மீது குற்றம் சாட்டி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த மாத தொடக்கத்தில் மோடியின் தலைமை அரசியல் எதிரியான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார.
இந்த கைதிற்கு எதிராக இந்தியாவின் எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் ஜனநாயகத்தை காப்பாற்று என்ற பெயரில் முதல் பெரிய பொது ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
புது டெல்லியின் உயர்மட்ட அதிகாரியும், ஊழலுக்கு எதிரான முக்கிய பிரச்சாரகருமான கெஜ்ரிவால், மோடியின் அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படும் மத்திய அமலாக்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.
கெஜ்ரிவாலுக்கு எதிரான வழக்கு புனையப்பட்டது என்றும் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் Aam Aadmi கட்சி கூறுகிறது.
ஆனால் மோடியின் பாரதீய ஜனதா கட்சி (BJP) எதிர்க்கட்சிகளின் பேரணி அவர்களின் ஊழலை மறைப்பதற்காகவே என்று கூறியது.