அமெரிக்காவில் விபத்துக்குள்ளான பால்ட்டிமோர் பாலத்தைச் சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்
இலங்கை வந்த போது அமெரிக்காவின் மேரிலந்து மாநிலத்தில் பால்டிமோர் நகரில் விபத்துக்குள்ளான பாலத்தில் இடிபாடுகளை அகற்றும் மாபெரும் பணி தொடங்கியிருக்கிறது.
பாலத்தை மோதிய கப்பல் டாலியிலிருந்தும் இடிபாடுகள் அகற்றப்படுகின்றன. இடிந்து விழுந்த பாலத்தின் பாகங்களை இன்னும் சிறிய துண்டுகளாக்கிய பிறகே அவற்றைக் கடலிலிருந்து அகற்ற முடியும்.
ஆயிரம் டன் எடைகொண்ட பொருள்களைத் தூக்கும் பெரிய பாரந்தூக்கி, சம்பவம் நடந்த இடத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
மறுசீரமைப்புப் பணிகளில் என்னென்ன சவால்கள் இருக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
அதன் வழி சுத்தப்படுத்தும் பணிகள் விரைவாக முடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. துறைமுகத்தை அடுத்த சில வாரங்களில் மீண்டும் திறக்கமுடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனால் 47 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பாலத்தை மீண்டும் கட்டுவதற்குப் பல ஆண்டுகள் எடுக்கும் என்று அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.