அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் தீவிர பாதுகாப்பு
ஈஸ்டர் ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் நாளை (31) அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த பாதுகாப்பு ஏற்பாடு நாளை பிற்பகல் வரை ஆராதனை முடிந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈஸ்டர் ஞாயிறு அன்று 1,873 கிறிஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகள் நடைபெறவுள்ளதுடன், 6,552 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் 2746 இராணுவத்தினர் அந்த தேவாலயங்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை பாதுகாப்பதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
புனித வெள்ளி ஆராதனைகள் நேற்று (29) ஆரம்பமானதில் இருந்தே பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, நாளைய தினம் அது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.