IPL Match 11 – இறுதி கட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வி
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணிக்கு குவிண்டன் டி காக் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். இவருடன் களமிறங்கிய கே.எல். ராகுல் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
டி கார் 38 பந்துகளில் 54 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 9 ரன்களிலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கேப்டன் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 42 ரன்களை குவித்தார். போட்டி முடிவில் லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது.
பஞ்சாப் அணி சார்பில் சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அர்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், ரபாடா மற்றும் ராகுல் சாஹர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவான் மற்றும் பேர்ஸ்டோ சிறப்பான துவக்கத்தை கொடுத்தது.
பேர்ஸ்டோ 29 பந்துகளில் 42 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த பிரப்சிம்ரன் சிங் 7 பந்துகளில் 19 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார்.
போட்டி முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயான்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.