இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை எப்போது நிறைவுக்கு வரும்?
நாட்டிலிருந்து பாதாள உலகமும் போதைப்பொருள் கடத்தலும் ஒழிக்கப்பட்டுள்ளதை பொதுமக்கள் உணரும் போது நீதியின் செயற்பாடு முடிவுக்கு வரும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், நடவடிக்கைகளை பாதியில் நிறுத்தினால், தற்போதைய நிலைமையை மீட்டெடுக்க முடியும் எனவும், அதனை சரியான புரிதலுடன் கையாள்வதாகவும் தெரிவித்தார்.
பாதாள உலகத்துடன் தொடர்பில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் போதைப்பொருளும் பாதாள உலகமும் ஒழிந்துவிட்டது என்பதை இந்நாட்டு மக்கள் உணரும் நாளே அது முடியும் நாளாகும். அதுவரை நாம் இதைச் செய்ய வேண்டும், காரணம் பாதியில் நிறுத்தப்பட்டால், அது திரும்புவதற்கு அதிக நேரம் எடுக்காது என்றும் அவர் கூறினார்.