விண்வெளியின் மர்ம கருந்துளைகள் – குழப்பத்தில் விஞ்ஞானிகள்
விண்வெளியின் மர்ம கருந்துளைகளை சுற்றி காந்த சக்தி இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமி இருக்கும் Milky Way எனும் பால்வீதியின் நடுவே பெரும் கருந்துளை உள்ளது.
Sagittarius A* எனும் கருந்துளையைச் சுற்றி வலுவான காந்த சக்தி காணப்படுவதாக விண்வெளி ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
European Southern Observatory எனும் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பு Sagittarius A* கருந்துளையைப் படமெடுத்துள்ளது.
அதில் காணப்பட்ட காந்தப் பகுதிகள் மற்ற கருந்துளைகளிலும் கவனிக்கப்பட்டுள்ளன.
M87 எனும் மண்டலத்தில் உள்ள M87* கருந்துளையைச் சுற்றியும் காந்த சக்தி இருந்ததாக ஆய்வு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கருந்துளைகளிலும் காந்தப் பகுதிகள் இருக்கலாமென அது நம்புகிறது.
கருந்துளைகள் பொதுவாக மண்டலங்களின் நடுவே இடம்பெறுகின்றன. சூரியனைக் காட்டிலும் பல பில்லியன் மடங்கு கனமாக உள்ள கருந்துகளைகள் மர்மாகவே உள்ளன.
அவை எப்போது உருவாயின,அவற்றின் தன்மை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கருந்துளைகளின் காந்த சக்தியிலிருந்து ஒளிகூடத் தப்பிக்கமுடியாது…அவை குறிப்பிட்ட தொலைவில் உள்ள அனைத்தையும் ஈர்த்துவிடும்.