நான்கு பாடசாலை மாணவர்கள் மா ஓயா ஆற்றில் மூழ்கி பலி
அலவ்வ வலகும்புர பிரதேசத்தில் மா ஓயா ஆற்றில் மூழ்கி நான்கு பாடசாலை மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீரில் மூழ்கிய மேலும் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற போது ஐந்து சிறுவர்கள் கொண்ட குழு ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
இவர்களில் ஒரு சிறுவன் பிரதேசவாசிகளால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும், ஏனைய நால்வரும் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொல்கஹவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தரம் 09 மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 11 times, 1 visits today)





