ஜேர்மனியில் வேலை நேரத்தை குறைக்க நடவடிக்கை!
ஜேர்மனியின் பிரதான ரயில்வே ஆப்ரேட்டருக்கான ரயில் ஓட்டுநர்கள் மற்றும் சில பணியாளர்கள் 2029 ஆம் ஆண்டுக்குள் அவர்களது வேலை வாரத்தை 38 மணிநேரத்திலிருந்து 35 மணிநேரமாக குறைப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அதிக சம்பளத்திற்கு கூடுதல் மணி நேரம் வேலை செய்ய விரும்பம் தெரிவித்துள்ளனர்.
ஏறக்குறை ஐந்துமாதங்களாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து இதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.
ஊதியக் குறைப்பு இல்லாமல் வேலை நேரத்தை குறைக்க வேண்டும் என்ற GDL இன் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2026 முதல் 2029 வரை நான்கு நிலைகளில் நிலையான வேலை நேரம் 35 மணிநேரமாக குறைக்கப்படும் என்று இரு தரப்பு ஒப்பந்தம் எதிர்பார்க்கிறது. ஆனால் பணியாளர்கள் வாரத்தில் 35 முதல் 40 மணிநேரம் வரை எதையும் தேர்வு செய்ய முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.