இந்தியா செய்தி

157 ஓட்ட வெற்றியிலைக்கை நோக்கி விளையாடிக்கொண்டிருக்கும் சென்னை அணி

16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.

இன்று மும்பையில் நடைபெறும் 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 38 ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார்.

இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடுகிறது.

சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

 

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!