இலங்கையில் 12 வீதமான முதியோர் தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாடசாலை மட்டத்தில் கற்பிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் வாய் பல் ஆரோக்கியத்தை சரியாக பேணுவது முக்கியமானது என குறிப்பிட்ட அவர், நாட்டில் இன்று ஏராளமானோர் வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற நோய்களைத் தடுக்க சரியான சுகாதாரப் பழக்கங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன வலியுறுத்தியுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)