இந்தியா

ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்கள்.. வெறும் கையால் அடித்து விரட்டிய தாயும் மகளும்!

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் ஆயுதங்களுடன் வீடு புகுந்த கொள்ளையர்களை, சற்றும் அஞ்சாது வெறும் கையால் அடித்து விரட்டிய தாய் – மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

கைத்துப்பாக்கி மற்றும் கத்தியுடன் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்றவர்களை, வீட்டில் தனித்திருந்த இரு பெண்கள் தீரத்துடன் போராடி அவர்களை அடித்து விரட்டிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று முன்தினம் நடந்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொலிஸார் உறுதிபடுத்தியதை அடுத்து, இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

அமிதா மஹ்னோத் என்ற பெண்மணி, தனது இளம் வயது மகள் மற்றும் பணிப்பெண் ஆகியோருடன் வீட்டில் தனித்திருந்தபோது இரு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் நுழைகின்றனர். வீட்டின் மற்றொரு அறையில் தாயும் மகளும் இருந்தபோது, கொள்ளையர் இருவரும் கையில் கிடைத்ததை சுருட்டிக்கொண்டு தப்பிக்க முயல்கின்றனர்.

If someone came into my house with a weapon and ran off with stolen things  in his hands, would I get in trouble for shooting his leg to get him down  until

ஆனால் அமிதா மஹ்னோத் கண்ணில் ஒரு கொள்ளையன் சிக்கியதால் அவனைப் பிடிக்க பாய்கிறார். ஹெல்மெட் அணிந்திருந்த அந்த கொள்ளையன் தன் கையில் துப்பாக்கி இருந்ததால், அமிதா பயந்துவிடுவார் என்று நினைத்திருந்தான். ஆனால் அமிதா மட்டுமன்றி அவரது மகளும் சேர்ந்துகொண்டு தாக்குதல் தொடுக்க, ஹெல்மெட் அணிந்த கொள்ளையன் அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என வீட்டிலிருந்து வெளியேற முயல்கிறான்.

ஆனால் அதற்கு இடம்கொடாது தாயும் மகளுமாக கொள்ளையன் மீது பாய்ந்து தாக்கியதோடு, ஹெல்மெட்டை அகற்றி அவனது அடையாளத்தையும் அறிந்துகொண்டனர். தாய் மற்றும் மகளிடம் சரமாரியாக அடிவாங்கிய கொள்ளையன் கேட்டை திறந்துகொண்டு தெறித்து ஓடுகிறான். இதனிடையே இன்னொரு கொள்ளையன் வீட்டுக்குள் ஒளிந்திருப்பதாக அமிதாவிடம் ஓடிவந்து பணிப்பெண் தெரிவிக்கிறார்

Video: Hyderabad woman, daughter fight off, chase away armed robbers -  India Today

உடனே அச்சமின்றி அந்த கொள்ளையனை பிடிக்க வீட்டுக்குள் இருபெண்களும் அடுத்த பாய்ச்சலை மேற்கொள்கின்றனர். வீட்டின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த CCTV கேமராவில் பதிவான வீடியோவில் வீட்டுக்குள் நடந்த அந்த மோதல் காட்சிகள் பதிவாகவில்லை. அதற்குள் அக்கம்பக்கத்திலிருந்து ஆண்கள் உதவிக்கு வர, வீட்டின் உள்ளிருந்து இரண்டாவது கொள்ளையன் கத்தியுடன் பாய்ந்து ஓடுகிறான்.

இதுவரையிலான களேபர காட்சிகள் CCTV கேமராவில் பதிவாகி உள்ளன. தகவலறிந்து வந்த பொலிஸாரின் விசாரணையில், CCTVயில் பதிவாகி இருந்த சுஷில் குமார், பிரேம் சந்திரா என 2 கொள்ளையர்களின் அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தை சேர்ந்த இந்த இருவரும் செகந்திரபாத்தில் தங்கி நிழலான காரியங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். அமிதா அடிப்படையில் தற்காப்பு கலை பயின்றவர் என்பதால், தனது மைனர் மகளுடன் இணைந்து துணிச்சலுடன் கொள்ளையர் மீது தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டி அடித்திருக்கிறார். சினிமா காட்சிகளுக்கு சவால் விடும் இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக, அமிதா மற்றும் அவரது மகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

(Visited 10 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே