ஐரோப்பா செய்தி

மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட இங்கிலாந்து ஆசிரியைக்கு வாழ்நாள் தடை

மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு, ஆசிரியர் தொழிலில் ஈடுபட வாழ்நாள் தடைவிதித்து இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

16 வயது மாணவியுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட இங்கிலாந்து ஆசிரியைக்கு கற்பித்தல் பணியை மேற்கொள்ள வாழ்நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 32 வயதாகும் எரின் ஹெப்ல்வைட் என்ற ஆசிரியைக்கு இதே குற்றத்தின் கீழ் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2021ல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் அண்மையில் வெளியே வந்ததை அடுத்து, அரசின் நடத்தை குழுவின் விசாரணைக்குப் பிறகு, அந்த ஆசிரியைக்கு வகுப்பறைக்குத் திரும்ப வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது.

2018-ம் ஆண்டு தனது 16 வயது மாணவியுடன் ஆசிரியை பாலியல் உறவில் ஈடுபட்டிருந்தார். இது தொடர்பாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் 2021-ம் ஆண்டில் டீன் ஏஜ் பெண்ணை உடலுறவுக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆசிரியை ஹெப்ல்வைட்டுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சிறுமியுடன் உறவு கொண்டதோடு இல்லாது அது குறித்து வருத்தம் இல்லாத வகையில் ஆசிரியை செயல்பட்டதும் அவர் மீதான சிறை தண்டனையை உறுதியாக்கின.

​ஸ்னேர்ஸ்புரூக் கிரவுன் நீதிமன்ற விசாரணையில், ஆசிரியை ஹெப்பிள்வைட் 16 வயது மாணவிக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி வைத்தும், தன்னுடைய நிர்வாண படத்தை அனுப்பி வைத்தும் பாலியல் செயல்பாட்டுக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனைத் தொடர்ந்து உணவகம் ஒன்றின் கழிவறையில் வைத்து சிறுமியுடன் ஆசிரியை உறவில் ஈடுபட்ட குற்றமும் நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யப்பட்டது.

(Visited 9 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!