AI தொழில்நுட்ப அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றுபட வேண்டும் – ஆலிவர் டவுன்!
AI இன் அச்சுறுத்தலை எதிர்கொள்ள உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என பிரிட்டிஷ் துணைப் பிரதமர் ஆலிவர் டவுடன் அறிவித்துள்ளார்.
குறித்த ஏஐ தொழில்நுட்பமானது தவறான தகவல்களை பரப்பவும், சுதந்திரமான தேர்தலை தடுக்கவும் வாய்ப்பாக அமையும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தென்கொரியாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், முனிச் பாதுகாப்பு மாநாட்டில் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஒப்புக்கொண்டதை மேற்கோள் காட்டியர் அவர் மேற்குலக நாடுகள் இதை கடைப்பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக தெரிவித்தார்.
உலகெங்கிலும் உள்ள சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்திற்கான மற்ற சவால்களுக்கு மத்தியில் AI இலிருந்து ஆபத்துகள் வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.