நிம்மதியான உறக்கம் வேண்டுமா? இந்த உணவுகள் முக்கியம்
ஒரு நாளைக்கு 7 முதல் 8 மணி நேரம் குறைந்தது நாம் தூங்க வேண்டும். இந்நிலையில் நாம் இந்த 4 உணவுகளை எடுத்துகொண்டால், இரவில் ஆழமான தூக்கம் வர இது உதவும். இந்நிலையில் இன்று உலக தூக்கம் நாள் என்பதால் இந்த தகவல்கள் நமக்கு உதவியாக இருக்கும்.
பாதாம்
இதில் மெக்னிஷியம், டிரிப்டோபான் உள்ளது. இவை நாம் ஓய்வாக உணர உதவும். இதனால் நாம் அதிகம் ஆழமாக தூங்குவோம். நாம் தூங்குவதற்கு முன்பாக பாதாமை எடுத்துகொண்டால், நமது உடல் மற்றும் மனம் மிகவும் அமைதியாக இருக்கும்.
வாழைப்பழம்
இதில் பொட்டாஷியம், மெக்னீஷியம் உள்ளது. இது நமது சதைகளுக்கு ஓய்வு தரும், சீரான தூக்கத்தை கொடுக்கும். இரவில் திடீரென்று விழிப்பு வரும் சிக்கல் இதனால் குறையும்.
ஓட்ஸ்
இதில் கார்போஹைட்ரேட், மெலடோனின் உள்ளது. இது நம்மை ஓய்வாக உணரச் செய்யும். தூக்கத்தை கொடுக்கும். தூங்குவதற்கு முன்பாக நாம் சூடான ஓட்ஸ் உணவை சாப்பிட்டால், தூங்குவதற்கு உதவியாக இருக்கும்.
கிவி
இதில் வைட்டமின் சி, வைட்டமின் கே, செரோடோனின் உள்ளது. இவை தூக்கத்தின் நேரத்தை அதிகரிக்கும். மேலும் இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால், நீங்கள் விரைவாக தூங்கிவிடுவீர்கள்.