ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் புட்டினுக்கு வெற்றி நிச்சயம் ! நிபுணர்கள் கருத்து!
2024-ம் ஆண்டு நடைபெறும் ரஷ்ய அதிபர் தேர்தலில் ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபர் விளாடிமிர் புடின் நிச்சயமாக வெற்றிப்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெளிநாடுகளில் வசிக்கும் ரஷ்யர்களும் அந்த நாடுகளில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு சென்று வாக்களிக்க முடியும் என்பது சிறப்பு.
29 பிராந்தியங்களில் முதன்முறையாக வாக்களிக்கும் நபர்களுக்கு ஆன்லைனில் வாக்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.
2000 ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவில் ஆட்சியில் இருக்கும் 71 வயதான அதிபர் புதின், 2004, 2012 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2021 ஆம் ஆண்டு ஜனாதிபதி புடின் கையெழுத்திட்ட ஆணையின்படி, அவர் மேலும் இரண்டு முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடலாம்.
அதன்படி அவர் உயிருடன் இருந்தால் 2036 வரை ரஷ்யாவின் அதிபராக பதவி வகிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், சோவியத் யூனியனின் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு ரஷ்யாவை அதிக காலம் ஆட்சி செய்த தலைவராக அதிபர் புதின் மாறுவார்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ரஷ்ய மக்களிடையே உரையாற்றிய ஜனாதிபதி புடின், தாய்நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க ஒன்றாக வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
நாடு கடினமான காலகட்டத்தை கடந்து வருவதாகவும், எனவே ஒற்றுமையாகவும் நம்பிக்கையுடனும் செயல்பட வேண்டியது அவசியம் என்றும் அதிபர் புதின் குறிப்பிட்டார்.
உக்ரைனிலிருந்து ரஷ்யாவால் இணைக்கப்பட்ட பிராந்தியங்களில் உள்ள மில்லியன் கணக்கான மக்களும் இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.