ஆஸ்திரேலியாவில் நடந்த சோகம் – நிச்சயதார்த்தத்தில் உயிரிழந்த மணமகன்

ஆஸ்திரேலியாவில் தம்முடைய சொந்த நிச்சயத்தார்த்த நிகழ்ச்சியில் 29 வயது லியாம் டிரிமர் (Liam Trimmer) கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லியாம் டிரிமர் பிரித்தானியாவை சேர்ந்த அவர் பொலிஸ் அதிகாரியாகப் பணிபுரிய ஆஸ்திரேலியாவுக்குக் குடிபெயர்ந்தார்.
வீட்டில் நடந்த விபத்தால் கழுத்தில் முக்கிய ரத்தக்குழாய் வெட்டப்பட்டது. அந்த இரத்தக்குழாய் மூலம் இரத்தம் மூளைக்குச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
அவருடைய குடும்பத்தார் அவரைக் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவசர மருத்துவ நிபுணர்கள் வந்தடைந்த சிறிது நேரத்தில் அவரது உயிர் பிரிந்தது.
அவர் எப்படிக் கீழே விழுந்தார் என்ற விவரங்களை பொலிஸார் தெரிவிக்கவில்லை. வழக்கை மரண விசாரணை நீதிபதி விசாரிப்பார் என்று பொலிஸார் குறிப்பிட்டது.
(Visited 10 times, 1 visits today)