இலங்கையில் ஹோட்டல் அறைக்குள் 2 சடலங்கள்

அம்பாறை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் சடலமும் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த பெண்ணும் நபரும் நேற்றைய தினம் ஹோட்டலில் அறை ஒன்றை பெற்று தங்கியுள்ளனர்.
மாலை 5.00 மணி ஆகியும் இருவரும் அறையை விட்டு வெளியே வராததால், ஹோட்டல் உரிமையாளர் அருகம்பே சுற்றுலாப் பொலிஸாருக்குத் தெரிவித்தனர்.
இதையடுத்து, பொலிஸார் வந்து அறையின் கதவைப் பார்த்தபோது, பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். மேலும் நபரின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 27 times, 1 visits today)