இஸ்லாமியர்களுக்கு ரமலான் வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
பிறை தெரிந்ததை தொடர்ந்து, இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கியதாக தலைமை காஜி சலாஹூத்தீன் அய்யூப் ஹழ்ரத் அறிவித்துள்ளார்.
ரமலான் பிறை தொடங்கிய நாளில் இருந்து இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பார்கள்.
ரமலான் மாத இறுதிநாளில் ரமலான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இந்தநிலையில், இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அனைவருக்கும் ஆசீர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், செழிப்பையும் கொண்டு வரட்டும்.
(Visited 14 times, 1 visits today)





