ரமழான் மாதத்திற்கான பிறை தென்பட்டது: கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு
புனித ரமழான் நோன்பு செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு திங்கட்கிழமை (11) மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
நோன்பு பெருநாளைக் கொண்டாடுவதற்கான தலைப்பிறை இன்று மாலை தென்பட்டுள்ளதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
இதன்படி நாளை முதல் புனித நோன்பு பெருநாள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊடக சந்திப்பில் பிறைக்குழுவின் உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)





