இலங்கையில் சில மருந்துகளுக்கு தட்டுப்பாடு!
இலங்கையில் 252 அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வைத்தியர் சமால் சஞ்ஜீவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் பதவி விலகி 05 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் தற்போதைய சுகாதார அமைச்சரும் இதற்கான தீர்வை முன்வைக்கவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை பிரதேச மருத்துவ மனைகளில் மருந்து கொள்வனவிற்கு நிதி வழங்கும் திட்டமொன்று நடைமுறையில் இருப்பதாக கூறிய அவர் இந்த முறை மூலம் முறைக்கேடுகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





