கனடாவில் ஆறு இலங்கையர்கள் கொலை – சீஸ் கேக் சாப்பிட ஆசைப்பட்ட சந்தேகநபர்
 
																																		கனடாவில், ஒட்டாவாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் குடும்பங்களுக்கு சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வைபவம் ஒன்றின் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான பிராங்க் டி சொய்சாவின் 19ஆவது பிறந்தநாள் எவ்வாறு அங்கு கொண்டாடப்பட்டது என்பதை அது காட்டியது.கொலை நடந்த அதே வீட்டில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
அன்றைய தினம் அவருக்கு சீஸ் கேக் சாப்பிட ஆசை இருந்ததாகவும், அதன்படி தனுஷ்கா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு சீஸ் கேக்கை வழங்கியதாகவும் தனுஷ்கவின் குடும்ப நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, ஒட்டாவா படுகொலையில் கொல்லப்பட்ட இலங்கையர்களின் உறவினர்கள் அடுத்த சில நாட்களில் நாட்டிற்கு வந்து இறுதி சடங்குகளை செய்ய திட்டமிட்டுள்ளதாக கனடாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஹர்ஷ நவரத்ன தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்காக பர்ஹாவன் குடியிருப்பாளர்களால் நேற்று ஒரு `நினைவு நிகழ்ச்சி’ ஏற்பாடு செய்யப்பட்டது.
 
        



 
                         
                            
