AI உதவியுடன் இனி மரிலின் மன்றோவுடன் பேசலாம்!

பிரபல நடிகை மரிலின் மன்றோ (Marilyn Monroe) இறந்து 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
ஆனால் அவரிடம் பேசுவது இனி சாத்தியமாகப்போகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் மரிலின் மன்றோவின் தத்ரூபமான மின்னிலக்க உருவத்துடன் பேசலாம்.
வரும் வெள்ளிக்கிழமை (15 மார்ச்) அமெரிக்காவின் டெக்சஸ் (Texas) மாநிலத்தில் நடைபெறவிருக்கும் தொழில்நுட்ப மாநாட்டில் மின்னிலக்க மரிலின் மன்றோ அறிமுகமாவார்.
மாநாட்டுக்கு வரும் விருந்தினர்களுக்கு அவருடன் பேசும் வாய்ப்புக் கிடைக்கும்.
மரிலினைப் போன்ற ஆடை… சிகை அலங்காரம்.. குரல்…. அவரைப் பாராட்டிப் பேசினால் சிரித்து பதிலளிக்கவும் மின்னிலக்க மரிலினால் இயலும்.
Soul Machines எனும் செயற்கை நுண்ணறிவு நிறுவனம், Authentic Brands Group நிறுவனத்துடன் இணைந்து மின்னிலக்க மரிலினை உருவாக்கியுள்ளது.
(Visited 17 times, 1 visits today)