இங்கிலாந்து செல்ல அனுமதி கோரி முருகன் மனுத்தாக்கல்!
முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 2022ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்ட வி. முருகன் என்ற ஸ்ரீ ஹரன், இங்கிலாந்து செல்ல வேண்டிய விமான ஆவணங்களை பெற அவகாசம் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அங்கு, சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்குச் சென்று, தனது விமான ஆவணங்களைத் தயாரித்து, இங்கிலாந்து செல்ல விசா பெறுவது தொடர்பான நேர்காணலில் கலந்து கொள்ள அனுமதி கோரினார்.
இங்கிலாந்து சென்று அங்கு புகலிடம் கோரி விண்ணப்பிப்பது அவரது நோக்கமாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று பின்னர் விடுவிக்கப்பட்ட முருகனின் மனைவி எஸ். நளினி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
ஜூன் 14, 1991 அன்று ராஜீவ் காந்தி கொலையில் சந்தேகத்தின் பேரில் நளினி கைது செய்யப்பட்டபோது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
சிறையில் இருந்தபோது அவர்களுக்கு மெஹாரா என்ற பெண் குழந்தை பிறந்தது.
2006 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்ற மெஹாரா அங்கு தனது தந்தையின் குடும்பத்துடன் சேர்ந்தார்.அவர் மருத்துவ இயற்பியலில் பட்டம் பெற்று தற்போது அங்கு பணியாற்றி வருகிறார்.