புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை – சம்பவத்தை கண்டித்து ஆங்காங்கே போராட்டங்கள்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
சிறுமி படுகொலைக்கு நீதிக்கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி புதுச்சேரி மாநில அதிமுகவும், இந்தியா கூட்டணியும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர்.
அதன்படி இன்று காலை முதல் புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளும் இயக்கப்படவில்லை. முழு அடைப்பு காரணமாக பேருந்து நிலையம் வந்த மக்கள், தாங்கள் செல்ல இருக்கும் இடத்திற்கு பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கடலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து வரும் பேருந்துகளும் தமிழக எல்லையில் நிறித்தி வைக்கப்பட்டுள்ளது,சென்னையில் இருந்து திண்டிவனம் வழியாக புதுச்சேரிக்குவரும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழக எல்லை பகுதியான பட்டானூர் எல்லையில் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன அதேபோல ஈசிஆர் சாலையில் இருந்து வரும் பேருந்துகளும் கீழ் புத்துப்பட்டு அருகே பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.பேருந்தில் இருந்து பயணிகள் தமிழக எல்லைப் பகுதியில் இறக்கி விடப்படுகின்றன. மேலும் போலீஸ் பாதுகாப்புடன் சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு பொதுமக்கள் சிரமத்தை பொறுப்பெடுத்தாமல் போராட்டத்துக்கு முழு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.