பிரித்தானியாவின் ருவாண்டா பாணி புகலிடத் திட்டங்களை திட்டமிடும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்
ஐரோப்பிய ஒன்றிய தலைவர், உர்சுலா வான் டெர் லேயன், சர்ச்சைக்குரிய இடம்பெயர்வு சீர்திருத்தங்களுக்கு தனது ஆதரவை வழங்கியுள்ளார்.
அதில் புகலிடக் கோரிக்கைக்காக மூன்றாம் நாடுகளுக்கு மக்களை நாடு கடத்துவது மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பாதுகாப்பைப் பெறுபவர்களுக்கு ஒதுக்கீட்டு முறையைத் திணிப்பது ஆகியவை அடங்கும்.
பிரித்தானியாவின் ருவாண்டா திட்டத்தைப் போன்றே கொள்கைகள் ஐரோப்பிய மக்கள் கட்சி அரசியல் குழுவில் உள்ள அனைத்துக் கட்சிகளுடனும் வகுக்கப்பட்டுள்ளன என ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவரான Manfred Weber தெரிவித்துள்ளார்.
இதில் ஜெர்மனியில் உள்ள von der Leyenஇன் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் அடங்கும் என குறிப்பிட்டுள்ளார்.
தீவிர வலதுசாரிகள் ஐரோப்பாவை உள்ளே இருந்து அழிக்க விரும்புகிறார்கள் என ஐரோப்பிய மக்கள் கட்சியின் தலைவரான Manfred Weber எச்சரித்துள்ளார்.
ஜூன் மாதம் ஐரோப்பிய தேர்தல் பிரச்சாரத்தில் குடியேற்றத்தைக் குறைக்கும் அதன் விருப்பம் பற்றி ஐரோப்பிய மக்கள் கட்சி தெளிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.