இலங்கையில் விற்பனை செய்யப்படும் கத்திரிக்காய்களினால் ஆபத்து
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்திரிக்காய்களில் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய ஆய்வில், சந்தையில் இருந்து எடுக்கப்படும் புதிய கத்தரிக்காய் மாதிரிகளில் 23 சதவீதம் மனிதர்களுக்கு தீங்கு விளைவிக்கும் பூச்சிக்கொல்லி எச்சங்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
காய்கறிகள் மற்றும் பழங்களை குளிர்ந்த நீரில் கழுவுவதற்குப் பதிலாக, வினிகர் அல்லது உப்பு சேர்க்க வேண்டும் என அதே பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு அறிவியல் பீடத்தின் உணவு மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் மூத்த விரிவுரையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போதே இந்த பூச்சிக்கொல்லிகளை நீக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காய்கறிகள் மற்றும் பழங்களின் வெளிப்புற தோலை அகற்றுவதன் மூலம் உணவில் உள்ள நச்சு இரசாயனங்களை எளிதில் அகற்ற முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.