ஆண்களை விட குறைந்த அளவில் உடல் பயிற்சி: பெண்களுக்கு அதிக பலன்கள்
அமெரிக்கன் கல்லூரி ஆப் கார்டியாலஜி என்ற ஆய்வு இதழ் சமீபத்தில் நடத்திய ஆய்வு பெண்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.
உடல் பயிற்சி கூடத்திற்கு செல்வதை சிரமமாக கருதும் பெண்களுக்கு உதவேகம் அளிக்கும் கண்டிபிடிப்பை வெளியிட்டுள்ளது.
ஆண்கள் செய்வதில் பாதி அளவு உடல் பயிற்சி செய்தாலே பெண்கள் அதிக நாட்கள் வாழ முடியும் என்று இந்த ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் கலந்து கொண்ட ஆண்கள் வாரத்திற்கு 300 நிமிடங்கள் ஏரோபிக்ஸ் பயிற்சி செய்தபோது, அவர்களுக்கு 18 % விரைவில் இறப்பு ஏற்படும் சாத்தியங்கள் குறைந்துள்ளது.
இதுவே பெண்கள் 140 நிமிடங்கள் வாரத்திற்கு உடற்பயிற்சி செய்தபோது, அவர்களுக்கு 24 % விரைவில் இறப்பதற்கான சாத்தியங்கள் குறைகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதுபோல சதைகளை வலுவாக்க உதவும் வெயிட் டிரெயினிங் பயிற்சி ஆண்கள் வாரத்திற்கு 3 முறை செய்தால் கிடைக்கும் பலனை பெண்கள் ஒரு முறை வாரத்திற்கு செய்தாலே பெற முடிகிறது.
இந்த ஆய்வில் 4 லட்சம் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த ஆய்வு 2017 முதல் 2017 வரை நடைபெறுள்ளது. இதில் கிடைத்த தகவல்கள், ஆய்வில் பங்கெடுத்தவர்களில் 40,000 பேர் இயற்கையான மரணத்தை தழுவிய தகவலுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிக நாட்கள் வாழ்வது என்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கிறது. இந்த ஆய்வு சில முக்கிய தகவல்கள் மட்டுமே தந்துள்ளது.
இந்நிலையில் வாரத்திற்கு 150 நிமிடங்கள் நாம் உடல் பயிற்சி செய்ய வேண்டும் என்பது அடிப்படையான ஒன்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.