போருக்கு துருப்புகளை தயார்ப்படுத்தும் வடகொரிய ஜனாதிபதி

வடகொரியாவின் மேற்கு பிராந்தியம் பகுதியில் நடைபெற்று வரும் போர் ஒத்திகை பயிற்சிகளை ஜனாதிபதி கிம் ஜாங் உன் ஆய்வு செய்துள்ளார்.
போருக்கான அதிதீவிர நிலையில் துருப்புகள் தயாராக இருக்க வேண்டுமென உத்தரவிட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவுடன் இணைந்து தென்கொரியா கடந்த 4ம் திகதியன்று கூட்டு போர் பயிற்சி மேற்கொண்டது.
இந்த நிலையில், இந்த பயிற்சி நடைபெற்றது.
இலக்குகளை குறிபார்த்து சுடுதல், ஹெலிகாப்டரிலிருந்து கீழே இறங்குதல் ஆகிய பயிற்சிகளை பார்வையிட்ட கிம் ஜாங் உன், படைவீரர்களுடன் கலந்துரையாடி தற்போதைய தேவைக்கேற்ப போர் உத்திகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.
(Visited 20 times, 1 visits today)