சிங்கப்பூரில் சத்தம் போடுவதால் ஏற்படும் பிரச்சினை – அமைக்கப்பட்டுள்ள குழு

சிங்கப்பூரில் அண்டைவீட்டார் சத்தம் போடுவதால் ஏற்படும் பெரிய பிரச்சினைகளைக் கையாள குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
தேசிய வளர்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் நகராண்மைச் சேவைகள் அலுவலகம் குழுவை அமைத்துள்ளது.
வீடமைப்பு வளர்ச்சிக் கழகம், அடித்தள அமைப்புகள், மற்ற அமைப்புகளோடு குழு அணுக்கமாகப் பணியாற்றும்.
வேண்டுமென்றெ சத்தம் ஏற்படுத்துவதால் உண்டான நீண்ட நாள் சர்ச்சைகளைக் கையாள நடைமுறைக் கோட்பாடுகள் வகுக்கப்படும்.
சமரசம் பேசுவதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படும்.
அவர்களுக்குச் சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரமும் வழங்கப்படும். சத்தத்தைக் கண்டறியும் உணர்கருவிகளைப் பொருத்துவது போன்ற தொழில்நுட்பங்களும் பயன்படுத்தப்படும் என அறிவிககப்பட்டுள்ளது.
(Visited 14 times, 1 visits today)